Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை எதிர்த்து இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்களால் கீயூபாவுக்கு ஆதரவு

பொருளாதாரத் தடையின் கொடூரத்தை அனுபவித்த வடக்கு கிழக்கு மக்கள் கியூபாவுக்கு ஆதரவளிக்க வேண்டும்,

பொருளாதாரத் தடையின் கொடூரத்தை அனுபவித்த வடக்கு கிழக்கு மக்கள் கியூபாவுக்கு ஆதரவளிக்க வேண்டும்,
கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை எதிர்த்து இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்களால் கீயூபாவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கடந்த 6ம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பும் அதனை தொடர்ந்து பதாகையில் ஆதரவு கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அரசியல் செயற்பாட்டாளர் மார்க்ஸ் பிரபாகர் பொருளாதாரத் தடையின் கொடூரத்தை அனுபவித்த வடக்கு கிழக்கு மக்கள் கியூபாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

கடந்த ஜனவரி மாதம் முதல் கீயூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையின் பகுதியாக அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் மீதான தடை காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் பட்டியை எதிர்கொண்ட இருப்பதை குறிப்பிட்ட புதிய மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயற்பாடுகளை இலங்கை மக்கள் எதிர்த்து போராடாவிட்டால் அதன் விளைவுகளை, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மேலதிகமாக எதிர்கொள்ள நேரிடும் என்று கூறினார்.

அங்கு கருத்து தெரிவித்த அரசியல் செயற்பாட்டாளர் வீ. வீரசிங்கம் “அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈரான் மீதான யுத்தம் மற்றும் கீயூபா மீதான மிகக் கொடூரமான பொருளாதாரத் தடை என்பன மனித உரிமைகளின் காவலன் ஜனநாயகத்தின் காவலாளி என்ற போலி முகத்திரைகள் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் இனிமேலாவாது தமது பிரச்சினைகளுக்கு தீர்வை அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள் நம்பிக்கையை கைவிட வேண்டும்” என்றார்.

தடைகளுக்கு எதிராக இலங்கை, இந்தியா உட்பட 180 இற்கும் மேற்பட்ட நாடுகள் ஜ.நாவில் வாக்களித்துள்ள போதிலும் அமெரிக்கா கியூபா மீதான தடையை மேலும் இறுக்கியுள்ள நிலையில் அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டையும் 20 மணித்தியாலத்திற்கும் மேற்பட்ட மின் வெட்டையும் கீயூப மக்கள் எதிர்கொண்டுள்ளனர். 
இதேவேளை 1970ம் ஆண்டிலிருந்து பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள ஒருதலைப்பட்சமானதும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதுமான பொருளாதாரத் தடைகள் காரணமாக 38 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.