Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு!

நிறைவை முன்னிட்டு யாழில் எழுச்சி மாநாடு நடத்த ஏற்பாடு.

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்,
1976ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்று இறைமையின் அடிப்படையில் அரசியல் அபிலாஷையாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், தமிழ் மக்களின் ஒருமித்த மற்றும் ஜனநாயக அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடாக அமைந்தது. ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னரும், அதன் அடிப்படை கோரிக்கைகளும் கொள்கைகளுமே தமிழின விடுதலைப் பாதையின் அடிநாதமாகவும் அடித்தளமாகவும் உள்ளது.

இந்த மாநாட்டில் கல்வியாளர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் தீர்மானத்தின் அரசியல், சட்ட மற்றும் தமிழ் இனத்தின் இறைமையின் பரிமாணங்களும் ஆராயப்படும். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழ் மக்களின் அபிலாஷையை வெளிப்படுத்த பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடக பிரதிநிதிகள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரை அன்புரிமையுடன் அழைக்கின்றோம் என தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பில் தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை அகஸ்ரின் அடிகளார், அருட்பணி ஜெகதாஸ் அடிகளார் மற்றும்  க.இதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.