Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

"புத்தாண்டுச் சந்தையும் விற்பனைக் கண்காட்சியும் - 2026"

,

"புத்தாண்டுச் சந்தையும் விற்பனைக் கண்காட்சியும் - 2026"
சண்டிலிப்பாய் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும் சமுர்த்திப் பிரிவும் இணைந்து நடத்திய புத்தாண்டு விற்பனைச்  சந்தை நேற்றைய தினம் (09) சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி சமுதாய அமைப்பின் மூலம் பதினைந்து [15] சமுர்த்திப் பயனாளிகளுக்கு 'அருநலு' கடன் கொடுப்பனவாக தலா பத்தாயிரம் ரூபா [10000] வழங்கப்பட்டது.
  
பிரதேசத்தின் அறுபத்திமூன்று [63] சிறுதொழில் முயற்சியாளர்கள் பங்குபற்றிப் பயனடைந்த இந்த விற்பனைக்கூட ஆரம்ப நிகழ்வில் சண்டிலிப்பாய்  பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், மேலதிக மாவட்டப் பதிவாளர், சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.