Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ஊழலுக்கு எதிராகப் பேசும் ஜனாதிபதி, மோசடிப் பேர்வழிக்கு அமைச்சுப் பதவி வழங்கியிருப்பதன் பின்னணி என்ன? மோசடியில் ஜனாதிபதிக்கும் பங்குண்டா?

தமது நண்பர் ஊழல்வாதி என்பது தெரிந்திருந்தும், அவருக்கு நாட்டின் மிக முக்கியமான அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

நீதிமன்றத்தில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ள ஒருவருக்கு நாட்டின் முக்கிய அமைச்சுப் பதவியை வழங்கியதன் மூலம், அந்த மோசடிகளில் ஜனாதிபதிக்கும் பங்குண்டா? என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. சாடியுள்ளார்.  வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,  "தற்போது நிலக்கரி மோசடி குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள குமார ஜயக்கொடி, முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக இருந்தபோது உரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அங்கு இடம்பெற்ற பாரிய ஊழல் தொடர்பில் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதுடன், தற்போது அவர் பிணையிலேயே வெளியே உள்ளார்.

தமது நண்பர் ஊழல்வாதி என்பது தெரிந்திருந்தும், அவருக்கு நாட்டின் மிக முக்கியமான அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி வழங்கியுள்ளார். ஊழலுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறும் ஜனாதிபதி, மோசடிப் பேர்வழிக்கு அமைச்சுப் பதவி வழங்கியிருப்பதன் பின்னணியில், அந்த மோசடிப் பணத்தில் ஜனாதிபதிக்கும் பங்கு செல்கின்றதோ என நாம் சந்தேகிக்கின்றோம்.
நிலக்கரி கொள்வனவில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதை கணக்காய்வு அறிக்கை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பில்லியன் கணக்கான நட்டம் மக்கள் மீதே சுமத்தப்படவுள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, இது குறித்து ஜனாதிபதி கிஞ்சித்தும் கவலைப்படாமல் மௌனம் காப்பது ஏன்?

நண்பர்களுக்குச் சலுகை வழங்குவதில்லை எனக் கூறி அதிகாரத்தைப் பிடித்தவர்கள், தற்போது தமக்குத் தேர்தல் செலவு செய்தவர்களைத் தாராளமாகக் கவனித்து வருகின்றனர். தம்மிக பெரேரா முதல் மேல்மாகாண ஆளுநர் வரை பலருக்குச் சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. மத்திய வங்கி மோசடி குறித்து மேடைக்கு மேடை பேசியவர்கள், இதுவரை ஒருவருக்கு எதிராகவேனும் நடவடிக்கை எடுத்தார்களா?" - என்று ரஞ்சித் மத்தும பண்டார காட்டமாக வினவினார்.