Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

இரு பெண்கள் துஸ்பிரயோகம் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது !

பயணத்தின் நடுவில் யுவதிகளுக்கு குடிப்பதற்கு வைன், அரை மயக்கத்தில் யுவதிகள்,காட்டு பகுதிக்குள் பாலியல் துஸ்பிரயோகம்!

 மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திருச்சபை ஒன்றின் ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக போதகர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வவுனிக்குளம் பகுதிக்கு சென்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கொண்டாட்டம் முடிந்து அவர்கள் திரும்பும் போது இரு பெண்களும் , போதகர் உள்ளிட்ட மூன்று ஆண்களும் வான் ஒன்றில் வீடு திரும்பினார்கள். பயணத்தின் நடுவில் யுவதிகளுக்கு குடிப்பதற்கு வைன் வழங்கியுள்ளனர். அதனை அருந்தியவர்கள் அரை மயக்கத்தில் இருக்கும் போது , காட்டு பகுதிக்கு வாகனத்தை கொண்டு சென்று , இரு யுவதிகளுடனும் போதகர் உள்ளிட்ட மூவரும் அத்துமீறி நடந்து , பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். 

அதன் பின்னர் வீடு திரும்பிய இரு யுவதிகளும் , நடந்த சம்பவம் தொடர்பில் பெற்றோரிடம் கூறியதை அடுத்து , இருவரையும் பெற்றோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர். அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடும் செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் போதகர் உள்ளிட்ட மூவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.