Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ரணில் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சித்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அரசாங்கத்தில் இருந்து விலகிவிடும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை ஒத்திவைக்க வேண்டும்

அரசாங்கத்திலிருந்து விலகுமா பொதுஜன பெரமுன: சாகர காரியவசம் வெளியிட்டுள்ள கருத்து.

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல்களை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கும் ஐ.தே.கவின் யோசனைக்கு பொதுஜன பெரமுன எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும், ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சிப்பாராயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சி என்ற ரீதியில் தங்களது தரப்பினர் தேர்தலை பிற்போடும் யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இரண்டு ஆண்டுகளுக்கு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை ஒத்திவைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தேர்தலை பிற்போடுவதற்கு தங்களது கட்சி ஒத்துழைப்பு வழங்காது என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.