Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

முருங்கை விதைகள் குறித்த புதிய கண்டுபிடிப்பு!

நீரைச் சுத்திகரிப்பதற்காகத் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களுக்கு இணையான வினைத்திறனுடன் முருங்கை விதைகள்

 "அதிசய மரம்" என அழைக்கப்படும் முருங்கை மரத்தின் விதைகளுக்கு, குடிநீரில் உள்ள PVC மைக்ரோபிளாஸ்டிக் (நுண்பிளாஸ்டிக்) துகள்களை 98.5% வரை அகற்றும் தனித்துவமான திறன் உள்ளதாக பிரேசில் மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் குழுவொன்று கண்டறிந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையின்படி, நீரைச் சுத்திகரிப்பதற்காகத் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களுக்கு இணையான வினைத்திறனுடன் முருங்கை விதைகள் செயற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முருங்கை விதைகள் ஒரு "உறைவியாக" (Coagulant) செயற்பட்டு, நீரில் உள்ள சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை ஒன்றோடொன்று ஒட்டச் செய்கின்றன. இதன் மூலம் அத்துகள்கள் பெரியதாகி எளிதில் வடிகட்டி அகற்றக்கூடிய நிலைக்கு மாறுகின்றன.
நீரில் பரவலாகக் காணப்படும் தீங்கு விளைவிக்கும் PVC மைக்ரோபிளாஸ்டிக்குகளை அகற்றுவதில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதுடன், மனிதத் தலைமுடியின் தடிமனில் நான்கில் ஒரு பங்கு அளவுள்ள மிகச் சிறிய துகள்களைக் கூட இதன் மூலம் அகற்ற முடிந்துள்ளது.

தற்போது பயன்படுத்தப்படும் 'அலுமினியம் சல்பேட்' போன்ற இரசாயனப் பொருட்களைப் போலன்றி, முருங்கை விதைகள் இயற்கையாகவே மட்கக்கூடியவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு நச்சுத்தன்மையற்றவை. அலுமினியம் அதிகளவில் உடலைச் சென்றடைவது நரம்பியல் நோய்கள் ஏற்படக் காரணமாகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஒரு முருங்கை விதை மூலம் சுமார் 10 லீட்டர் நீரைச் சுத்திகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய நகரங்களின் நீர் சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு அதிக அளவிலான முருங்கை விதைகள் தேவைப்படும் என்பதால், இந்த முறையானது தற்போது சிறிய சமூகங்களுக்கு அல்லது இரசாயனப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளச் சிரமமான பகுதிகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

உலகளாவிய ரீதியில் சுமார் 83% குழாய் நீரில் மைக்ரோபிளாஸ்டிக் அடங்கியுள்ளமை 2024 ஆம் ஆண்டு ஆய்வொன்றில் தெரியவந்துள்ள பின்னணியில், இவ்வாறான இயற்கையான தீர்வொன்றைக் கண்டறிவது சுகாதாரத் துறையில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. எதிர்கால ஆய்வுகள் மூலம் ஏனைய பிளாஸ்டிக் வகைகள் மற்றும் மிகச் சிறிய 'நானோபிளாஸ்டிக்குகளை' (Nanoplastics) அகற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படவுள்ளன.