Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா, மாமனிதர் என்ற தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருது வழங்கி மதிப்பளிப்பு!

தமிழீழ மண்ணின் பெருமையையும்,தமிழ் மக்களின் வாழ்வியலையும், மாவீரர்களின் தியாகங்களையும் தனது கம்பீரக் குரலால் ஆர்ப்பரித்தவர்.

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை மாமனிதர் என்ற தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருது வழங்கி கௌரவிப்பு,

சுயநலம்  கருதாது நேர்மையுடனும் ,நெஞ்சுறுதியுடனும் எமது சுதந்திரப்போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் தேனிசை செல்லப்பா அவர்களை நாம் இழந்து விட்டோம்.
தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்த இந்த கலைமாமணியை இழந்து தமிழர் தேசம் சோகக்கடலில் மூழ்கிக்கிடக்கிறது.  

திரு.தேனிசை செல்லப்பா ஒரு சிறந்த கலைப்படைப்பாளி.இவரிடம் கலைகளுக்கே உரித்தான உள்ளம் இருந்தது,வற்றாத கலையுணர்வு இருந்தது,கட்டுக்கடங்காத கற்பனை வளம் இருந்தது, கலைக்கு அணிசெய்கின்ற நிறைந்த அறிவு இருந்தது. தமிழ் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் இருந்தது .தமிழ் மண்ணின் விடுதலைக்கு பங்காற்றவேண்டும் என்ற உயரிய குறிக்கோள் இருந்தது.சுயமான ஆளுமை இருந்தது.இவை எல்லாம் ஒன்று கலந்த மனிதம் இருந்தது.இந்த அழகான மனித மாண்பு அனைவரையும் அவரை நோக்கிக் கவர்ந்து கொண்டது.  தனது கலைப் படைப்புகள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும்.ஒடுக்கு முறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டிவிட்டார்.
சிங்கள அரச பயங்கரவாதம் எமது தாயக மண்ணிலே நிகழ்த்திய கொடுமைகளையும், கொடூரங்களையும் அதன் ஆழ அகலங்களையும் தனது இனிய குரலால் பதிவுசெய்தார்.
சுதந்திரப்போராட்டங்களுக்கு உந்துசக்தியாக ஊக்கசக்தியாக அமைவது தேசப்பற்று.இந்த தேசப்பற்று இவரிடம் நிறையவே இருந்தது.
கடல்கள் தாண்டி தாயகத்திற்கு வெளியே தூரதேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதைத்தான் இவர் பாரத மண்ணில் இருந்து புரிந்தார். 

தமிழீழ மண்ணின் பெருமையையும்,தமிழ் மக்களின் வாழ்வியலையும், மாவீரர்களின் தியாகங்களையும் இவரது அழகிய குரலால் ஆர்ப்பரித்தவர்.அவர் பாடிய தமிழீழப் பாடல்கள் மூலம் வரலாற்றில் என்றும் வாழ்பவர்.தமிழ் மக்களுக்கு இவரது இழப்பு மாபெரும் துயர நிகழ்வு.

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து  அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக ‘மாமனிதர்’என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றோம்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு  எமது அன்பான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.