Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தனியார் பேருந்து சாரதிகளுக்குப் பணித்தடை மற்றும் தண்டப்பணம்!

போக்குவரத்துச் சேவையைச் சீர்குலைக்கும் சேவைப் பணியாளருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பொதுப் போக்குவரத்துச் சேவையின் போது சக பேருந்து சாரதிகளுடன் முரண்பட்டுத் தாக்குதல் நடத்தியமை, நேர ஒழுங்கைக் குழப்ப முற்பட்டமை மற்றும் உரிய பதிவுகளின்றிச் சேவையில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக, தனியார் பேருந்து சாரதிகளுக்குப் பணித்தடை மற்றும் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வெவ்வேறு  சம்பவங்கள் தொடர்பில் போக்குவரத்து அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பரந்தன் - முறிகண்டி வழித்தடச் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்து சாரதி ஒருவர், மற்றுமொரு பேருந்து சாரதியைத் தாக்கியுள்ளார். அத்துடன், புளியம்பொக்கணை கோவில் உற்சவத்தின் போது பேருந்துகளின் நேர ஒழுங்கைக் குழப்பும் வகையிலும் அவர் செயற்பட்டுள்ளார். இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குறித்த சாரதிக்கு 5 நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனக் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இராமநாதபுரம் - முழங்காவில் வழித்தடச் சேவையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு சாரதி, வவுனியா - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்து சாரதியைக் கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் வைத்து அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளின் போது, குறித்த நபர் அதிகார சபையில் எவ்வித உத்தியோகபூர்வ பதிவுகளுமின்றிச் சாரதியாகக் கடமையில் ஈடுபட்டிருந்தமையும் கண்டறியப்பட்டது. இதற்கமைவாக, அவருக்கு 1,500 ரூபா தண்டப்பணமும் 3 நாட்கள் பணித்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், போக்குவரத்து அதிகார சபையில் சாரதியாக முறையாகப் பதிவு செய்த பின்னரே அவர் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படுவார் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவையைச் சீர்குலைக்கும் வகையிலோ, பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ அல்லது வன்முறையைத் தூண்டும் வகையிலோ செயற்படும் எந்தவொரு போக்குவரத்துச் சேவைப் பணியாளருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, பொதுப் போக்குவரத்தின்போது இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றால், பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் எனவும் அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.