Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தொடரும் போதைப் பொருள் கடத்தல்கள்!

இந்திய பீடி இலைகளுடன் கல்பிட்டி ஆலங்குடா பகுதியில் இரு நபர்கள் கைது.

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்பிட்டியின் ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது. சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் அறுநூற்று இருபத்தி இரண்டு (622) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் நேற்று(10) இடம்பெற்றுள்ளது 

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கலபிட்டியின் ஆலங்குடா கடற்பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல நடவடிக்கையின் போது. அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது. இரண்டு (02) சந்தேக நபர்களும், அந்தப் படகும். அத்துடன் அந்தப் படகினுள் இருபது (20) பைகளில் பொதிசெய்யப்பட்டிருந்த சுமார் அறுநூற்று இருபத்தி இரண்டு (622) கிலோகிராம் பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின்போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், ஆனவாசல் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் ஆகியவற்றை புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.