Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இலங்கை விவகாரம் - ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்!

,

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 
 
இந்தச் சம்பவத்தை அடுத்து மீனவர் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் கவலையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 6 மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக ரீதியிலான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.