Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வெனிசுலாவை 51-வது மாநிலமாகச் சித்தரித்த டொனால்ட் ட்ரம்ப்

எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவைத் தனது கட்டுப்பாட்டில் - டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில், வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் 51-வது மாநிலமாகக் குறிப்பிடும் வரைபடம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் வெனிசுலாவின் எல்லைக்குள் அமெரிக்கக் கொடி பொறிக்கப்பட்டு "51-வது மாநிலம்" (51st State) என லேபிளிடப்பட்டுள்ளது.
சீனாவிற்கு முக்கியமான உச்சிமாநாட்டிற்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் ட்ரம்ப் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறிவந்த ட்ரம்ப், அதனைப் புதிய அமெரிக்க மாநிலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலிப்பதாகவும் ஊடகமொன்றிடம் அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் பிடிபட்டதைத் தொடர்ந்து, நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ளார்.

வெனிசுலா ஒருபோதும் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறுவது குறித்துச் சிந்தித்ததே இல்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அமெரிக்காவுடனான உறவுகளைச் சீர்செய்யும் விதமாக, சுரங்கம் மற்றும் எண்ணெய் துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் (குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள்) முதலீடு செய்வதற்கு அவர் அனுமதி அளித்துள்ளார்.
வெனிசுலாவின் எதிர்க்கட்சியினர் நாட்டில் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். எனினும், புதிய தேர்தல் எப்போது நடைபெறும் என்று மே 1-ம் திகதி கேட்கப்பட்ட கேள்விக்கு, அது "என்றாவது ஒரு நாள்" நடக்கும் என்றும், தமக்கு அது குறித்துத் தெரியவில்லை என்றும் ரோட்ரிக்ஸ் பதிலளித்துள்ளார்.