Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நாம் ஏன் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்? - சிவா சின்னப்பொடி

வாருங்கள்! பாரிஸ் வீதிகளில் ஒன்றுபடுவோம்! நம் வலிகளைப் பகிர்வோம்! நீதிக்கான நெருப்பை நெஞ்சில் ஏந்துவோம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நாம் ஏன் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்? - சிவா சின்னப்பொடி
இன்று மே 18. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாள். நம் கண்முன்னே நம் உறவுகள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட அந்தச் சோக வரலாற்றை நெஞ்சில் நிறுத்தி, நீதிகேட்டு நிற்கும் நாளிது.

இன்று பாரிஸில் எங்கு, எத்தனை மணிக்கு நடக்கிறது?
இடம்: பாரிஸ் குடியரசுச் சதுக்கம் (Place de la République - பிளாஸ் து  லா ரெபப்ளிக்) நேரம்: பிற்பகல் 2:00 மணி அளவில் தொடங்கி, அங்கிருந்து பஸ்தீய் சதுக்கத்தை (Place de la Bastille) நோக்கிப் பேரணியாகச் சென்று நினைவேந்தல் நடைபெறும். நாம் ஏன் இதில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்?

இது வெறும் சடங்கல்ல; இது நம் இனத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் புனிதமான கடமை. நாம் நேரில் கண்ட, அனுபவித்த வலிகளை மறக்காமல் இருப்பதே நீதிக்கான முதல் படி. வரலாற்றைப் பதிவு செய்வதற்கும், நடந்த உண்மைகளை உலகிற்கு உரக்கச் சொல்வதற்கும் இதுபோன்று நாம் ஒன்றுகூடும் நினைவேந்தல்களே மிகச் சிறந்த ஆயுதம். எழுத்துக்களால் எப்படிக் காலத்தை உறைய வைக்க முடியுமோ, அதேபோல நாம் நீதிகேட்டு ஒன்றுகூடும் இந்தக் கூட்டமும் உலக அரங்கில் ஒரு வரலாற்று ஆவணமாகவே என்றென்றும் பதியப்படும்.

பல்லாயிரக்கணக்கான நம் மக்கள், பச்சிளங் குழந்தைகள், முதியவர்கள் எனப் எந்தப் பாரபட்சமுமின்றி இரத்தம் சிந்தி வீழ்ந்தார்கள். அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளின் மரண ஓலம் இன்னும் முள்ளிவாய்க்கால் காற்றில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் நமக்காக, நம் விடிவிற்காகத் தன்னுயிரை ஈந்தவர்கள்.
அவர்களின் தியாகத்தை நாம் மறந்துவிட்டால், நாளை வரலாறும் நம்மை மன்னிக்காது. நம் வலிகளை நாம் மறப்பது, நாம் எதிரிகளுக்குச் செய்யும் மிகப்பெரிய வெற்றியாகிவிடும். நாம் கூடும் ஒவ்வொரு கூட்டமும், நாம் ஏற்றும் ஒவ்வொரு சுடரும், சிந்தும் ஒவ்வொரு துளிக் கண்ணீரும் சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கும் வல்லமை கொண்டது.

பிரான்ஸ் போன்ற உலகத்தின் மையத்தில் நாம் எழுப்பும் குரல், அனைவரின் காதுகளுக்கும் சென்றாக வேண்டும். நாம் உயிரோடு இருக்கிறோம், எங்களுக்கான நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்பதைப் பறைசாற்ற வேண்டிய தார்மீகக் கடமை நமக்கு இருக்கிறது.
உறவுகளே, அன்றாட வேலைகள் அனைத்தையும் ஒரு சில மணி நேரத்திற்கு ஒதுக்கி வையுங்கள். உங்கள் பிள்ளைகளையும் அழைத்து வாருங்கள். அவர்களுக்கு நம் வரலாற்றைச் சொல்லுங்கள். முள்ளிவாய்க்கால் மண்ணில் வீழ்ந்தவர்களுக்கு நாம் செய்யும் ஆகப்பெரிய அஞ்சலி, அவர்களை ஒருபோதும் மறக்காமல் இருப்பதே.

வாருங்கள்! பாரிஸ் வீதிகளில் ஒன்றுபடுவோம்! நம் வலிகளைப் பகிர்வோம்! நீதிக்கான நெருப்பை நெஞ்சில் ஏந்துவோம்! முள்ளிவாய்க்கால் மரணங்கள் வீண்போகாது! அறம் ஒருநாள் வெல்லும்!