Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு குற்றவாளி தற்கொலை!

,

யாழ் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் (46) யாழ்  சிறைக்குள் தூக்கிட்டு தற்கொலை.

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி  பூபாலசிங்கம் ஜெயக்குமார் இன்று யாழ் சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு. வித்தியா கொடுங்கோலர்களால் குதறப்பட்டு பதினொரு ஆண்டுகளில் அதே மாதத்தில் முதலாவது நீதியின் தீர்ப்பு.
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயது மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015 மே 13 அன்று கடத்தப்பட்டு, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், கொதிநிலையையும் ஏற்படுத்தியது.வழக்கின் முக்கிய விவரங்கள்:தீர்ப்பு: 2017 செப்டம்பர் 27 அன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேல் முறையீடு: தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். இறுதித் தீர்ப்பு: குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரித்த இலங்கை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மே 2026-ல் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி  பூபாலசிங்கம் ஜெயக்குமார் இன்று யாழ் சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.