"டிஜிட்டல் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சித் திட்டம்"
சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த 2026 மே மாதம் 20 மற்றும் 21 ஆகிய இரு தினங்களில்!
"டிஜிட்டல் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சித் திட்டம்" (Digital Entrepreneurship Development Program)
சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சங்கீதா கோகுலதர்சன் அவர்களின் தலைமையில் கடந்த 2026 மே மாதம் 20 மற்றும் 21 ஆகிய இரு தினங்களில் "டிஜிட்டல் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சித் திட்டம்" (Digital Entrepreneurship Development Program) நடத்தப்பட்டது .
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில், சண்டிலிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த முப்பத்தொரு [31] சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வின் வளவாளராகப் பொறியியலாளர் வாட்சன் சர்மா (BSc in Engineering) அவர்கள் கலந்துகொண்டு, தற்கால நவீன வணிக உலகிற்கு அவசியமான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள் (Digital Marketing Strategies), சமூக ஊடகக் கையாளுகை மற்றும் வாடிக்கையாளர்களை ஈரத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பிலான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார் . இப்பயிற்சி நெறியின் இறுதியில் பங்குபற்றிய பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


