Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறக்க இராணுவத்தினர் சம்மதம், மக்கள் சுதந்திர நாடு!

காலை 06 மணி முதல் இரவு 7 மணி வரையில் திறந்து விடப்பட்ட வீதி மேலும்ஒரு மணி நேரம் நீடிப்பு

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் சம்மதித்துள்ளனர்.
பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது. குறித்த பகுதியை கடந்த ஆண்டு நேரக்கட்டுப்பாட்டுடன் இராணுவத்தினர் போக்குவரத்திற்கு அனுமதித்தனர்.

இந்நிலையில் வடமாகாண ஆளூநர் செயலகத்தில் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலின் போது, குறித்த வீதியினை 24 மணி நேர போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு இராணுவத்தினர், மறுத்துள்ளனர்.
அழுத்தமான கோரிக்கைகளை தொடர்ந்து மேலும் ஒரு மணி நேரம் வீதியை திறந்து விட சம்மதித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இதுவரை காலமும் காலை 06 மணி முதல் இரவு 7 மணி வரையில் திறந்து விடப்பட்ட வீதியினை தற்போது ஒரு மணி நேரம் நீடித்து இரவு 8 மணி வரையில் போக்குவரத்து செய்ய இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.