Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார்! அடையாளம் காட்டிய உறவினர்!!

தொழிலுக்காகச் சென்ற குருநகர் கடற்றொழிலாளர், சடலமாகபுங்குடுதீவுக் கடலில்!

புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார் என  அடையாளம் காட்டிய உறவினர்! 
கடந்த 25 ஆம் திகதி   தொழிலுக்காகச் சென்ற நிலையில்  காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் நேற்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் இன்று முன்னிரவு புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது.அத்துடன் சென்.பற்றிக்ஸ் வீதி குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வேலு உதயகுமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்பதாக கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற குறித்த தொழிலாளி கரைதிரும்பவில்லை என பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடும் தேடுதல் மேற்கொண்டும் குறித்த கடற்றொழிலாளி மீட்கப்படாதிருந்த நிலையில் இன்று முன்னிரவு புங்குடுதீவு 3 ஆம் வட்டார கடற்பரப்பில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியிருந்த நிலையில் காணாமல் போன தொழிலாளியின் உறவினர் ஒருவரால் அடையாளம் காட்டப்பட்டதை அடுத்து குறித்த சடலம் காணாமல் போன குருநகர் கடற்றொழிலாளியான வேலு உதயகுமார் என்பவரதி என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குறித்த சடலத்தை சட்ட வரையறைகளின் பிரகாரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல  நடவடிகை எடுத்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.