Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பொலிஸாரை மிரட்ட தன் கழுத்தை அறுத்த பெண் ! அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை.

பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை ஒப்படைப்பேன் - பொறுப்பதிகாரி!

பொலிஸாரை மிரட்ட தன்  கழுத்தை அறுத்த பெண்! பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை ஒப்படைப்பேன் அதிரடியாக கூறிய பொறுப்பதிகாரி!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாவடி பகுதியில் வன்முறை கும்பல்களுடன் தொடர்புபட்டு வீடுகளை அடித்து உடைத்தும் செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட நிலையில் அங்கே வருகை தந்த இளைஞனின் தாயார் பொலிஸாரை மிரட்டி  தனது கழுத்தை தானே பிளேட் மூலம் அறுத்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸாரை மிரட்டுவதால் எந்தப் பயனும் இல்லை இவ்வாறு கழுத்தை அறுத்து இறந்திருந்தால் பிரேத பரிசோதனையின் பின் சடலம் கணவனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் என்று பொறுப்பதிகாரி சிவானந்தம் நிதர்சன் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.