Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

வடக்கில் 'திலாப்பியா' மீன்வளர்ப்பு மையம் - சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடவடிக்கை

நன்னீர் மீன்பிடி நடவடிக்கையின் முக்கிய தளமாக உள்ள இரணைமடு!

சர்வதேச தொழிலாளர் அமைப்பு, கார்கிள்ஸ் (சிலோன்) பிரைவேட் லிமிடெட்டுடன் இணைந்து நோர்வே அரசின் அனுசரணையுடன் 'திலாப்பியா' மீன்வளர்ப்பு மற்றும் ஆரம்பநிலை பெறுமதிசேர் மையமொன்றை வடக்கு மாகாணத்தில் நிறுவியுள்ளது. இத்திட்டம் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறனுடைய மீன்வளர்ப்பினை வலுப்படுத்துவதையும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை விரிவுபடுத்துவதையும், இப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்களுக்கான மரியாதையான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதையும் பிரதான இலக்குகளாகக் கொண்டிருக்கிறது.

இச்செயற்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்துக் கருத்துரைத்திருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் ஜோனி சிம்ப்சன், 'சமூகங்கள், அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் தனியார் துறை என்பன இணைந்து செயற்படும்போது எதனைச் சாதிக்கமுடியும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக இந்தப் பதனிடும் நிலையம் காணப்படுகிறது. இது நீர்வாழ் உயிரின வளர்ப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்கு மாத்திரமன்றி, குறிப்பாகப் பெண்கள் மற்றும் விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு கௌரவமானதும் உற்பத்தித்திறன் மிகுந்ததுமான வேலைவாய்ப்புக்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம் சமூக நீதியை மேற்படுத்துவதற்குப் பங்களிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

நன்னீர் மீன்பிடி நடவடிக்கையின் முக்கிய தளமாக உள்ள இரணைமடுவில் அமைந்திருக்கும் இந்த மையம், இலகுவில் அபாயத்துக்கு உள்ளாகக்கூடிய நபர்கள் மற்றும் குழுக்களின் முயற்சியாண்மையை ஊக்குவித்தல் திட்டத்தின்கீழ் நிறுவப்பட்டதாகும்.

நோர்வே அரசின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டமானது இலங்கையின் வட பிராந்தியத்தில் சகலரையும் உள்வாங்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்குப் பிரதான பங்களித்தது. இத்திட்டமானது குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சமூகங்களை இலக்குக் குழுக்களாகக்கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இச்செயற்திட்டம் பற்றிக் கருத்து வெளியிட்டிருக்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான நோர்வே நாட்டின் அரசியல் பிரிவின் இரண்டாம் செயலாளர் டார்மோட் நூலாண்ட், 'பல திட்டங்களின் ஊடாக நோர்வே நாட்டின் நீண்டகாலப் பங்குதாரராக சர்வதேச தொழிலாளர் அமைப்பு இருக்கிறது. இத்திட்டங்கள் வடமாகாணத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்கின்றன. அதன் நீட்சியாகத் தற்போதைய புதிய திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எமது ஆதரவு மிகமுக்கியமானதாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.