Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

முட்டாள்களின் மூடநம்பிக்கை : ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம்.

புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம்.

இந்து முறைப்படி மேள தாளங்களுடன் தவளைகளுக்கு விமரிசையாக நடந்த திருமணம்!

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனைத்து மதங்களிலும் வித்தியாசமான வகையில் பல்வேறு சடங்குகளும் கொண்டாட்டங்களும் நிகழ்வது வழக்கும். அந்த வகையில் இந்து மதத்தைப் பின் பற்றும் மக்கள் முக்கியமாக கிராமங்களில் உள்ள மக்கள் தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்று நம்புகின்றனர்.

இது சுத்த மூடநம்பிக்கை என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும் இன்றளவும் சில இடங்களில் இந்த சடங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல் சிவப்புப் பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊரார் சூழ புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.