Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 10,000 பாடசாலைகள் இன்று இயங்கவில்லை – ஸ்டாலின்

.

 

சம்பள முரண்பாடுகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக குறைந்தது 10,026 அரச பாடசாலைகள் இன்று மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைகள், விடைத்தாள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் 30 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இன்று பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர் வேலைநிறுத்தத்தால் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டிய ஜோசப் ஸ்டாலின், தமது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இதேவேளை, சம்பள முரண்பாடுகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பல ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களினால் கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு எதிரே ஒல்கொட் மாவத்தை மற்றும் லோட்டஸ் வீதிக்கு அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.