Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார்.

வடக்கில் தனியார் பேருந்து சேவை ஸ்தம்பிக்கும் அபாயம்

வடக்கில் தனியார் பேருந்து சேவை ஸ்தம்பிக்கும் அபாயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார்.

குறித்த சம்பவமானது நேற்று (20) மதியம் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட பேருந்தின் நடத்துனர் தற்போது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்பில் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த சாரதி ஒருவர், நேற்று எதிர்பாராத வேளையில் நடைபெற்ற இந்த தீவிரமான தாக்குதல் அனைத்து தனியார் பேருந்து சேவையாளர்களுக்கும் உயிர் மீது அச்சம் ஏற்பட்டுள்ளது.

தவிரவும், இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்ட போதும், காவல்துறையினர் இந்தப் பிரச்சினையில் ஒரு அசமந்தப் போக்கை காண்பிக்கின்ற நிலையிலேயே போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

764 வழித்தட பேருந்து சேவை மாத்திரமே தற்போது சேவை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இதற்கு உரிய தீர்வு எட்டப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படும் வரை இந்த வேலைநிறுத்தப்போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

இந்த போராட்டமானது எதிர்வரும் நாட்களில் மேலும் விரிவடையும் எனவும் உரிய தீர்வு எட்டப்படாவிட்டால் யாழ் மாவட்டத்தையும் தாண்டி வடமாகாணம் முழுவதும் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டு இது பாரிய போராட்டமாக உருவாகும்.” என்றார்.