Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

விரைவில் நாடு திரும்புகின்றார் எம்.கே.சிவாஜிலிங்கம்: விமான நிலையத்தில் கைது செய்ய தயாராகும் பொலிஸார்

.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை கைது செய்வதற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸார் தயாராக உள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இந்தியாவில் சிகிச்சை பெற்றுவரும் அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரை கைது செய்ய பொலிஸார் தயாராகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி சுவீகரிப்பு தொடர்பாக முல்லைத்தீவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவரை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.கே.சிவாஜிலிங்கம் தற்போது இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில், அவர் விரைவில் நாடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்படுவதை தடுக்க நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பிக்க அவரது சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா செல்வதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவேன் என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.