Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் யாழ்ப்பாணம் கொக்குவில் தொடருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது.

கொக்குவில் தொடருந்து நிலையம் தற்காலிகமாக பூட்டு.

கொக்குவில் தொடருந்து நிலையம் தற்காலிகமாக பூட்டு.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் யாழ்ப்பாணம் கொக்குவில் தொடருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் இன்று (25) மேற்கொண்டு வருகின்றனர். 

காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் தொடருந்துகள் கொக்குவில் தொடருந்து நிலையத்தை அடைந்து மீண்டும் புறப்படுகின்றன. இருப்பினும் குறித்த தொடருந்து நிலையத்தில் வழமையான செயற்பாடுகள் எதையும் மேற்கொள்ள முடியாமல் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மேலும் இத் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என  தொடருந்து பணிமனையிலிருந்து எமக்கு கிடைத்த தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

குறித்த தொடருந்து நிலையில் இடம்பெற்ற சுமார் 20000 ரூபா கையாடல் தொடர்பாகவே இப் பணி இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தொடருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு செல்லவும் என்ற அறிவிப்பொன்றும் கொக்குவில் தொடருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.