Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

அதிபரானதும் எலான் மஸ்க்கிற்கு இந்த பதவிதான்.. அவரும் ஏத்துக்கிட்டாரு’- ரகசியத்தை உடைத்த டிரம்ப்!

.

“அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பளராக களம் காண்கிறார். அமரிக்கா மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் தொழிலதிபர் எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசினார்.

மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எலான் மஸ்க்கிற்கு அளிக்க உள்ள பதிவை குறித்து டிரம்ப் பேசியிருக்கிறார். நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் இதுகுறித்து பேசிய டிரம்ப், தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானதும், புதிதாக கமிஷன் ஒன்றை அமைத்து பெடரல் அரசாங்கத்தைச் சேர்ந்த அனைவரின் நிதி பரிவர்த்தனைகளை ஆராய்ந்து 6 ஏ மாதங்களில் அவற்றில் நடந்துள்ள மோசடிகள் கண்டறியப்படும்.

2022-ம் ஆண்டு நடந்த பல மோசடி மற்றும் முறையற்ற பரிவர்த்தனைகளால் நேர்மையாக வரி கட்டுபவர்கள் பல நூறு பில்லியன் டாலர்கள் வரியாக செலுத்த நேர்ந்தது.

எனவே நான் பதிவிற்கு வந்ததும் புதிய கமிஷன் அமைத்து அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமிப்பேன்.

தலைவர் பதவியை ஏற்க அவரும் [எலான் மஸ்க்கும்] ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார்.

இது நிச்சயம் அவசியமான ஒன்று என்று எலான் மஸ்க்கும் எக்சில் ஆமோதித்துள்ளார்.

முன்னதாக 2008 and 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.”,