Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

நிதிச்சுமையால் பாதிக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டுமானப் பணிகள் தற்போது வேகமெடுத்து வருகிறது.

ஒரு படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் சங்கத்துக்கு நிதிப் பற்றாக்குறை என்பது சற்று யோசிக்கத்தான் வைக்கிறது.

நடிகர் சங்கத்துக்கு அடுத்தடுத்து குவியும் நிதி.. வாரிக் கொடுத்த நெப்போலியன்..
நிதிச்சுமையால் பாதிக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டுமானப் பணிகள் தற்போது வேகமெடுத்து வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப் பட்ட பணிகள் இடையில் சில வருடங்கள் எந்த வளர்ச்சியும் இல்லாமல் அப்படியே நின்றது. காரணம் நிதிப் பற்றாக்குறை.
ஒரு படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் சங்கத்துக்கு நிதிப் பற்றாக்குறை என்பது சற்று யோசிக்கத்தான் வைக்கிறது. இருப்பினும் பட்ஜெட் ஒன்றும் பிரம்மாண்ட தொகை கிடையாது. ஏற்கனவே 40 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டிருந்தது. மேலும் 25 கோடிகள் தேவைப்பட்ட நிலையில் தற்போது நடிகர்கள் பலர் வாரிக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதில் முதலாவதாக தனது பங்களிப்பிலிருந்து ஆரம்பித்து வைத்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். தன் பங்குக்கு 1 கோடியை அள்ளிக் கொடுக்க, தொடர்ந்து உதயநிதியும் தானும் வருகிறேன் என அவரும் 1 கோடியை வழங்கினார். இதனால் மற்ற நடிகர்களுக்கும் ஓர் நம்பிக்கை பிறக்க, தளபதி விஜய்யும் 1 கோடியை நன்கொடையாக வழங்கினார். தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னால் இயன்ற பங்காக ரூ. 50 லட்சத்தை அளிக்க நன்கொடை வழங்கியவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த லிஸ்ட்டில் இன்னொரு நடிகரும் இணைந்துள்ளார். அவர் நெப்போலியன். நடிகர் நெப்போலியன் நடிகராக மட்டுமின்றி அமெரிக்காவில் ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனமும் நடத்தி வருகிறார். தற்போது தனது குடும்பத்துடன் மகனின் சிகிச்சைகாக அங்கே தங்கியிருக்கும் நெப்போலியன் அங்கு விவசாயமும் செய்து வருகிறார். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக தனது பங்களிப்பாக ரூ.1கோடியை வைப்புநிதியாக வழங்கியிருக்கிறார். இதற்காக நடிகர் சங்கம் சார்பில் பாராட்டியும், நன்றியும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர் நிர்வாகிகள். இவ்வாறு நடிகர்கள் பலரும் தன்னை வளர்த்த சினிமாத் துறைக்கு தங்களால் இயன்ற பணத்தினைக் கொடுத்து தென்னிந்த நடிகர் சங்கத்தின் கட்டுமானப் பணிகளுக்கும், வைப்பு நிதியும் வழங்கி வருகின்றனர். மேலும் நலிந்த கலைஞர்கள் பலரது வாழ்விலும் ஒளியேற்றி அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும் கிடைக்க வழிவகை செய்து கொடுத்திருக்கின்றனர்.