Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தமிழ் மொழியின் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வந்த, கடல்சார் தமிழறிஞர் ஒரிசா பாலு நினைவு நாள்.

.

அக்டோபர் 6, 2023 கடல்சார் தமிழறிஞர் ஒரிசா பாலு நினைவு நாள்.
தமிழ் மொழியின் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வந்தவர் இவரது இயற்பெயர் சிவ பாலசுப்பிரமணி. 1963-ம் ஆண்டு திருச்சி உறையூரில் பிறந்த இவர் கடலியல் தமிழரின் தொன்மையான வரலாறு தொடர்பாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொல்லியல் நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். குமரிக்கண்டம் கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழர் வரலாற்றை புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொல்லியல் நுட்பங்களையும் பண்டைய மரபுசார் அறிவை பின்புலமாகக் கொண்டும் ஆய்வு செய்தவர்.
1989-ம் ஆண்டு ஒரிசாவின் கலாசாரத்தைத் தீர ஆராய்ச்சி செய்ததால் இவர் ஒரிசா பாலு என்று அழைக்கப்பட்டார். கடல் வழியாகத் தமிழர்கள் பயணம் செய்ததை அறியப் பல நாடுகளுக்குப் பயணம் செய்து அங்கு இருக்கும் தமிழர்களுடன் உரையாடி தனது ஆய்வினை தொடர்ந்த இவர், "சிந்து நாகரிகம், கிரேக்க நாகரிகம், சீன நாகரிகம் எகிப்து நாகரிகம் என எல்லாவற்றிலும் தமிழருடைய ஊடுருவல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். கொரியாவைப் பார்க்கும் போது கொரிய மொழியில் 4000 சொற்கள் தமிழிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. இது மட்டுமில்லாமல் சீனா, பர்மா, தாய்லாந்து, மலேசியா என வெகுவான மரபுகளில் தமிழர்களுடைய மரபு கலந்திருக்கிறது.
கடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராக பணிபுரிந்த இவர் மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள், மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாகச் செய்தி குழுமம், கடல் சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மேலும் தனது ஆய்வுகளின் தொடர்ச்சியாய் கீழடி போலத் தமிழகத்தில் இன்னும் பல்வேறு இடங்கள் அகழாய்வு செய்யப்பட்ட வேண்டியுள்ளது என்று வலியுறுத்திச் சென்றிருக்கிறார்.
வரலாற்றாசிரியர், ஆய்வாளர், விஞ்ஞானி, எழுத்தாளர் எனத் தனது வாழ்வில் பல பரிமாணங்களைத் தமிழிற்காகவே தொட்டிருந்த ஒரிசா பாலு கடந்த ஆண்டு இதே நாளில் மரணமுற்றார்
. (பேராசிரியர் ஜெயராமன் அவர்களின் பதிவு)
Peut être une image de 1 personne et texte