Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

மாவீரர் நாள் நினைவேந்தல்; சிங்கள இனவாதத்தை தூண்டும் விமல் வீரவன்ச- சபா.குகதாஸ் காட்டம்..!

.

மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் விமல் வீரவம்ச தெரிவித்த கருத்து அவரின் இயலாமையையும் சிங்கள இனவாதத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024 ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அநுர அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதாவது வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் உட்பட எந்த நினைவேந்தலுக்கும் எதிர்காலத்தில் அனுமதிக்க கூடாது என எச்சரித்துள்ளார்.

கடந்த காலங்களில் அதி உச்சமாக தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய  விமல்  வீரவன்ச மீண்டும் அதனை கையில் எடுத்துள்ளார்.

இச் செயற்பாடு விமல்  வீரவன்சவின் இயலாமையையும் சிங்கள இனவாதத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.

வடக்கு , கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் மாவீரர் நாள் என்பது தமிழர்களின் தேசிய எழுச்சி நாள்  ஆகும்.

இதனை தெற்கில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் தடைகள் போட்டாலும் மக்கள் நினைவு கொள்வதை தடுக்க முடியாது.

யுத்தம் மௌனித்த பின்னர் கடந்த கால ஆட்சியாளரின் மிக கோரமான அடக்கு முறைகளை எதிர் கொண்டதுடன் தமிழர் தாயகம் நினைவேந்தல்களை நடாத்த பின் வாங்கியதில்லை.

 தென்னிலங்கையில் யுத்த வெற்றியை கொண்டாடும் போது இன அழிப்பை எதிர் கொண்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளை இழந்த தமிழர்களின் மனங்கள் எப்படி குமுறும் என்பதை வீரவன்ச போன்ற இனவாதிகள் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் நினைவேந்தல்களை இனவாத நோக்கில் பார்ப்பதுடன் சிங்கள மக்களை எதிராக தூண்டும் குரோத செயற்பாடு மேலோங்குமாயின் நாடு அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ முன்னோக்கி செல்ல ஒரு போதும் வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.