Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

யாழில் ஆலய நகையை பூசகரிடம் கொள்ளையடித்த குழு கைது!

.

யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் வைத்து கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம், நகை அபகரித்த குழுவை சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது பூசகரிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒன்றரைப் பவுண் சங்கிலி, நாற்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் பூசகருடைய சங்கிலியை விற்றுப் பெற்ற இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டதுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு திருட்டுச் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்படி சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.