Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

மைத்திரிபால தரப்பிற்கு எதிராக நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விரைவாக தள்ளுபடி செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீர்கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கரவினால் குறித்த உத்தரவு நேற்றையதினம் (11) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோரின் கோரிக்கையே இவ்வாறாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

கட்டுவா பிட்டிய குண்டுத் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த முறைப்பாடு 182ஆம் இலக்க சட்டத்திற்கு அமைய இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும் .