Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

எழுதுவினைப் பொருட்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

.

கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்கும் அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு கடந்த வௌ்ளிக்கிழமை அஸ்வெசும வங்கி கணக்குகளுக்கு திறைசேரி ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியின் பாதகமான முடிவுகளால் பிள்ளைகளின்  கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் நிகழ்த்திய “Household Survey on Impact of Economic Crisis – 2023" தரவுக் கணக்கெடுப்பின் பிரகாரம் தெளிவாகிறது. 

அதன் பிரகாரம், பாடசாலை செல்லும் பிள்ளைகளில் 55 சதவீதமானோர்  கல்வியில் பாதகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. 

கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் இச் சதவீதம் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. 

இவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் 53.2 சதவீதமானோர் பாடசாலை  எழுதுவினைப் பொருட்களை  கொள்வனவு செய்வதை குறைத்து அல்லது நிறுத்தியுள்ளதுடன், 26.1 சதவீதமானோர் முன்னர் பயன்படுத்திய பாடசாலை எழுதுவினைப் பொருட்களை மீளப் பயன்படுத்துவதிற்கும்  எண்ணியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட  பாடசாலை பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்களை குறைக்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு  எழுதுவினைப்   பொருட்கள் கொள்வனவிற்காக   பாடசாலை பிள்ளைகளிற்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. 

இங்கு, பாடசாலைக் கல்வி பெறுகின்ற அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களின் பிள்ளைகளிற்காக ஒரு பிள்ளைக்கு ரூ. 6,000.00 எழுது கருவிப் பொருட்கள் கொள்வனவுக்கான கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு வேறாக்கப்பட்டுள்ளதுடன்  அதனை 27.12.2024 இற்குள் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் செலுத்துவதற்கு  திறைசேரி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், ஏனைய தகுந்த பாடசாலைப் பிள்ளைகளிற்கு 2025  ஆம் ஆண்டிற்கு ஒரு பிள்ளைக்கு தலா 6000 ரூபா பெறுமதியான எழுத்துக்கருவிப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கொடுப்பனவிற்கான நிதி ஒதுக்கீடு கல்வி உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனூடாக பாடசாலைக் கல்விற்காக பெற்றோரினால் சுமக்கப்படும் செலவுகளிற்கு நிவாரணமளித்து அதனூடாக பாடசாலைப் பிள்ளைகளின் கல்வியைத்  தொடர்ச்சியாக மேற்கொள்வதினூடாக   அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது அரசின் நம்பிக்கையாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.