Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தென்னாபிரிக்க தங்கச் சுரங்கத்தில் சிக்கி 78 பேர் பலி : 166 பேர் மீட்பு

,

தென்னாபிரிக்காவில் சட்டவிரோதமாக  சுரங்கம் தோண்டியதில்  அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்டு, கடந்த இரு மாதங்களாக  சுரங்கத்தில் சிக்கித்  தவித்த 78 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தென்னாபிரிக்காவின் ஸ்டில்போன்டைன் நகர் அருகே சட்டவிரோதமாக தங்கச் சுரங்கம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்களை சரணடையுமாறு பொலிஸார்  வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொழிலாளர்கள் சரணடைய மறுத்து அரசாங்கத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்.

இதைத்  தொடர்ந்து அவர்கள் தங்கச் சுரங்கத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். இவ்வாறு கடந்த இரு மாதங்களாக சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை வெளியேற்ற அரசாங்கம்  முடிவு செய்தது. இதனால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்  பொருட்கள் நிறுத்தப்பட்டன.

அதைத்  தொடர்ந்து 2 கி.மீ., ஆழ சுரங்கத்திலுள்ள தொழிலாளர்கள் வெளியேற உதவும் கயிறு மற்றும் கம்பிகளை அரசாங்கம் அகற்றியது. இதனால் உணவின்றியும், நீரின்றியும் கடந்த இரு மாதங்களாக தவித்த 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 160 பேர் மேலே வரமுடியாமல் தவிக்கின்றனர். இதனால் உயிரிழப்போரின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.மேலும் சில தொழிலாளர்கள் வரமறுத்து சுரங்கத்திலேயே தங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் பிரதி நிதிக்குழு ஒன்று அரசாங்கத்தைக்  குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கம்  ஒரு வாரத்துக்கும் மேலாக மீட்புப்பணியை மேற்கொள்ள மறுத்ததே சுரங்கத் தொழிலாளர்கள் இறப்புக்கும் உடலில் நீரிழப்புக்கும் காரணம் என தெரிவித்துள்ளனர்.