Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

பிரித்தானியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தமிழர் மரபு திங்கள் விழா

.

தமிழர்கள் வாழ்வியலில் பெரும் பண்பாட்டு நிகழ்வான தமிழர் மரபு திங்கள் விழா  கடந்த ஞாயிறு (19/01/2025) பிரித்தானியாவில்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இயற்கையை மதித்து வழிபடும் தமிழர்கள் அந்த இயற்கைக்கு நன்றி கூறி விழா எடுப்பதுடன் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பையும் கொண்டாடும் விதத்தில் இந்த தை மாதத்தில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைத்திருநாளை கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில் பிரித்தானியாவில் பல பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் தம் அடையாளங்களின் வழி பயணிக்கவும் தம் அடையாளங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ் மரபு திங்கள் நிகழ்வுகளை பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம்(TCC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம்(CCD) ஆகியன இணைந்து தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வினை கடந்த  ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் நியூ மோல்டன் பகுதியில் கோலாகலமாக கொண்டாடினர்.

தமிழர்களின் வீர இசை பறை முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க மற்றும் மயிலாட்டம்,குதிரையாட்டம், புலியாட்டம்,கரகாட்டம் என தமிழர்களின் கண்கவர் கலைகளுடன் நிகழ்வின் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு  தமிழர்களின் பல்வேறு கலை பாரம்பரிய நிகழ்வுகளுடன் மரபுத் திங்கள் நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெற்றன.