Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

இஸ்ரேலிய பிரதமரின் அறிவிப்பு ; அமெரிக்கா வழங்கிய வெடிகுண்டுகள்.

.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வழங்கியுள்ள வெடிகுண்டுகள் கிடைத்துள்ள நிலையில் காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் ,அமெரிக்கா காசாவை அபிவிருத்தி செய்யும் டொனால்ட் டிரம்பின் திட்டத்தினை பாலஸ்தீனியர்களும், அமெரிக்காவின் சகாக்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ள போதிலும் வேறு விதமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இது உகந்த திட்டம் என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

எம்கே84 குண்டுகள். 

அதேவேளை காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவது இனச்சுத்திகரிப்பிற்கு ஒப்பானது என தெரிவிக்கப்படுவதை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார்.

காசா குறித்து நானும் டிரம்பும் பொதுவான மூலோபாயமொன்றை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு,அமெரிக்க ஜனாதிபதியின் திட்டமே சரியானது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நீங்கள் விரும்பிய எதனையும் செய்யுங்கள் என பிபியிடம் ( பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம்) தெரிவித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

என்னுடன் கலந்தாலோசித்துவிட்டு இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் இந்த வகை குண்டுகளை இஸ்ரேலிற்கு வழங்குவதற்கு தடை விதித்திருந்தார். எனினும் வலிமை மூலம் சமாதானம் என கருதுவதால் இந்த குண்டுகளை இஸ்ரேலிற்கு வழங்குவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.