Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரஷ்ய – உக்ரைன் போரில் இராணுவ கூலிப்படையாக சிறிலங்கா இராணுவம்!

ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ரஷ்யாவிற்கு பணிபுரிவதற்காகச் சென்ற இலங்கையர்களும் அந்நாட்டின் இராணுவத்துடன்.

ரஷ்ய – உக்ரைன் போரில் இராணுவ கூலிப்படையாக சிறிலங்கா இராணுவம்; தினம் தினம் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

ரஷ்ய – உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்துடன்  கூலிப்படையாக இணைந்து கொள்வதற்காக ஆட்கடத்தற்காரர்களால் அனுப்பட்ட சிறிலங்கா இராணுவ வீரர்களை மீட்பதற்கு இராஜதந்திர மட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கும் பதிலிளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இதேவேளை, ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ரஷ்யாவிற்கு பணிபுரிவதற்காகச் சென்ற இலங்கையர்களும் அந்நாட்டின் இராணுவத்துடன் இணைந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மற்றுமொரு இலங்கையர் பற்றிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.வலஸ்முல்லை உடதெனிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரஷ்யாவிலுள்ள தனியார் நிறுவனமொன்றிற்கு பணிய புரியச் சென்ற நிலையில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் தனது வேலையிலிருந்து விலகி ரஷ்ய   இராணுவ கூலிப்படையாக பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய – உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காகஆட்கடத்தற்காரர்களால் அனுப்பட்ட சிறிலங்கா இராணுவ வீரர்கள் தொடர்பில் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின்றது.