Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

கொழும்பில் அபாய நிலையில் 600 மரங்கள்.20 மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.சீரற்ற காலநிலையே காரணம்.

வெட்டி அகற்ற வேண்டிய அபாய நிலையில் 227 மரங்கள்.

கொழும்பில் அபாய நிலையில் 600 மரங்கள்: சீரற்ற காலநிலையால் 20 மரங்கள் முறிவு.

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு நகரசபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் இது வரையில் 20 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார்.

எனினும், இதன் காரணமாக கொழும்பு நகரில் எதுவிதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்த சம்பவம் பதிவாகியதன் பின்னர் கொழும்பில் அபாய நிலையில் 600 மரங்கள் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவற்றுள், விரைவில் வெட்டி அகற்ற வேண்டிய அபாய நிலையில் 227 மரங்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. குறித்த 227 மரங்களுள் 80 மரங்கள் மாத்திரமே தற்போது முழுவதிலுமாக அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள மரங்களை வெகு விரைவில் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் தெரிவித்தார்.

இதுவரையில் முறிந்து விழுந்துள்ள மரங்கள் எதுவும் இதற்கு முன்னர் அபாய நிலையில் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டவை அல்ல எனவும் இவ்வாறு மரங்கள் முறிந்து விழுவதற்கான காரணம் பலத்த காற்று மற்றும் கடும் மழை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெகு விரைவில் அபாய நிலையில் காணப்படக்கூடிய மரங்களை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுவதால் உயிரிழப்புகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.