Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கை

இலங்கையில் அரச நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான தரவுச் சேகரிப்பு.

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கையை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்தத் தொகை மதிப்பு இலங்கையின் 15 ஆவது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பாகும் . தேசிய அளவிலான தரவுச் சேகரிப்பிற்காக முதல்முறையாக டெப்லெட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டமை இதன் விசேட அம்சமாகும். அதன்படி, 15,000 டெப்லெட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தித் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதன் மூலம் தரவுச் சேகரிப்பை விரைவுபடுத்தவும், பிழைகளைக் குறைக்கவும், பெறப்பட்ட தரவுகளை நேரடியாகத் திணைக்களத்தின் சேர்வர் கணினிகளுக்குப் பதிவேற்றவும் முடிந்தது. அதனைத் தொடர்ந்து தரவுப் பகுப்பாய்வு மற்றும் அறிக்கை தயாரிப்புப் பணிகள் வினைத்திறனாக மேற்கொள்ளப்பட்டன. 

இலங்கையில் அரச நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான தரவுச் சேகரிப்புச் செயற்பாடான இந்தத் தேசிய தொகை மதிப்பு , தொகை மதிப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.  தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலில், மாவட்ட நிர்வாகத்தின் மேற் பார்வையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி அரச உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர்கல்வி பயில்வோர் உள்ளிட்ட விசேட பயிற்சி பெற்ற பெருமளவிலானோர் இந்தப் பணியில் இணைந்துகொண்டனர். இந்த தொகை மதிப்பு 'தொகைமதிப்புத் தருணமாக' 2024 டிசம்பர் 19-ஆம் திகதி நள்ளிரவு (00:00 மணி) கருதப்பட்டது.