Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக பிரச்சனைகள்! பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் - வைத்தியர் மலரவன்.

அதிகரித்துவரும் வெப்ப நிலையால் வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களால் கடுமையான தாக்கம் ஏற்படும்.

நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக  பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் விசேட மருத்துவர் எம். மலரவன் கோரியுள்ளார்.  யாழில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களால் கடுமையான தாக்கம் ஏற்படும். அதனால் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரைக்கும் அவசியமற்று வெளியில் நடமாட வேண்டாம்.அத்துடன் அதிக வெப்பத்தினால் நீர் சத்து அதிகம் தேவை என்பதால் சிறியவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை தேவைக்கேற்ப நீரினை பருக வேண்டும். தொப்பி அணிவது, அங்கீகரிக்கப்பட்ட கண்ணடிகளை அணிவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க  வேண்டும்.

கண்களை கசக்குவது, கைகளை சவுக்கரமிட்டு கழுவி பாதுகாப்பது, கைகளால் தேவையற்ற முறையில் கண்களை தொடுவது உள்ளிட்ட விடயங்களை தவிர்ப்பதன் ஊடாக இவ்வாறான நிலைமைகளிலிருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் .  கண்கள் அதிகம் பாதிப்பு அடைந்தால் மாத்திரம் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களை நாட வேண்டும்.கண் தொடர்பாக  மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.