Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நடுக்கடலில் தத்தளித்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

காங்கேசன்துறை - நாகப்பட்டினம், பயணிகள் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக பயணிகள் பல மணிநேரம் நடுக்கடலில் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இடையே சேவையில் ஈடுபட்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்று நேற்று (8) இரவு இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கப்பலில் பயணித்தவர்கள் பல மணிநேரம் நடுக்கடலில் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அதன் பின்னர், இந்திய அதிகாரிகள் மற்றும் அங்குள்ள மீனவர்கள் சிலரால் கப்பலும் அதில் பயணித்தவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் 144 பயணிகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி இக்கப்பல் புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் 4 மணிநேரத்தில் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரவு நேரமாகியும் கரை சேராததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய எல்லைக்கு உட்பட்ட கல்லார் பகுதிக்கு அருகே சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் கப்பல் பயணித்தபோது, கப்பலின் இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கடலில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கப்பல் நடுக்கடலிலேயே பல மணிநேரம் தத்தளித்ததை தொடர்ந்து, தகவலறிந்த இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மற்றொரு கப்பலின் உதவியுடன் பழுதடைந்த கப்பல் மெதுவாக இழுத்துச்செல்லப்பட்டு, இரவு 10:45 மணியளவில் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கொண்டுசேர்க்கப்பட்டுள்ளது.

இந்த படகில் பயணித்த 144 பேரும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இயந்திரக் கோளாறுக்கான காரணம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான பயணிகள் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த கப்பல் சேவை, இந்தப் பாதிப்பினால் நேற்று சில மணிநேரங்கள் தாமதத்தை எதிர்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.