Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

மானிப்பாய் சபையில் ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுமதி மறுப்பு - உறுப்பினர் வெளிநடப்பு!

மானிப்பாய் சபை குறித்து மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை.

மானிப்பாய் பிரதேச சபையின் அமர்வினை செய்தி அறிக்கையிடுவதற்கு ஊடகவியலாளர் புவனேஸ்வரன் கஜிந்தனுக்கு இன்றையதினம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உறுப்பினர் ச.க.அச்சுதபாயன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
ஊடகவியலாளர் கஜிந்தனும் வேறொரு ஊடகவியலாளரும் இன்றையதினம் மானிப்பாய் சபை அமர்வினை அறிக்கையிட சென்றபோது மற்றைய ஊடகவியலாளருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் கஜிந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநடப்பு செய்த உறுப்பினர் அச்சுதபாயன் கருத்து தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர் கஜிந்தன் கட்டடம் அமைப்பு தொடர்பாக தவறான செய்தி ஒன்றினை பிரசுரித்ததாக கருதியே இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வெளிப்படுத்திய விடயம் தவறல்ல. 

மானிப்பாய் சபை குறித்து மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை. சபையில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது. இருப்பினும் அவற்றை திருத்தாமல், அவை செய்தியாக பிரசுரிக்கப்படும்போது அந்த செய்தியை வெளியிடும் ஊடகவியலாளரை வெளியேற்றுவது தவறான செயல்.
குற்றம் இழைக்காதவர்கள் பயப்பட தேவையில்லை. சபையில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் ஊடகவியலாளரை உள்ளே விடத்தான் விருப்பம். ஆனால் தவிசாளர்தான் இந்த தடையை ஏற்படுத்தினார். குறித்த ஊடகவியலாளருக்கு எப்போது அனுமதி வழங்கப்படுகிறதோ அப்போதுதான் நான் சபை அமர்வில் கலந்துகொள்வேன் என்று கூறிவிட்டு சபை அமர்வில் இருந்து வெளியேறிவிட்டேன் என்றார் உறுப்பினர் ச.க.அச்சுதபாயன்.