Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

இரட்டைக் கொலை - தப்பியோடிய சந்தேகநபர், சில மணித்தியாலங்களுக்குள் மீண்டும் கைது!

மனைவி தூண்டியதன் பேரில் இந்த இரட்டைக் கொலையையும், கொள்ளையையும் செய்தார்.

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, நேற்று (27) அதிகாலை தப்பியோடிய சந்தேகநபர், சில மணித்தியாலங்களுக்குள் குறித்த பிரதேச தோட்டம் ஒன்றில் பதுங்கியிருந்த போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். 

அவர் கடந்த ஜூன் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்று (26) இரவு கண்டி தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியிருந்ததுடன், அவரைத் தேடி சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கமைய செயற்பட்ட ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள், பொகவந்தலாவ ‘பெட்ரசோ’ தோட்டத்தில் பதுங்கியிருந்த சந்தேகநபரை மீண்டும் கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள சந்தேகநபர், தனது மனைவி தூண்டியதன் பேரில், அவர் பெற்றிருந்த கடன் தொகையொன்றை செலுத்துவதற்காகவே இந்த இரட்டைக் கொலையையும் கொள்ளையையும் செய்ததாக அவர் தெரிவித்தார்.