Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

தேர்தலைப் பிற்போட்டால் ஐ.தே.க. அழிந்துவிடுமாம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீதே மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.” மஹிந்த ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்

பிரதான தேர்தல்களைப் பிற்போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முற்பட்டால் அதுவே அக்கட்சிக்கு இறுதிப் பயணமாக அமைந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலும், அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். இரு தேர்தல்களையும் பிற்போட முடியாது.

அவ்வாறானதொரு முட்டாள்தனமான முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்காது என்றே நம்புகின்றேன். அவ்வாறு இறங்கினால் அதுவே அக்கட்சியின் இறுதிப் பயணமாக அமையும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீதே மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.” – என்றார்.