Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

புதிய பரிணாமத்தில் மே18 இனப்படுகொலை வாரம்: யாழில் சிவில் அமைப்புக்கள் ஆராய்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டை பரவலாக மக்கள் மயப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

புதிய பரிணாமத்தில் மே18 இனப்படுகொலை வாரம்: யாழில் சிவில் அமைப்புக்கள் ஆராய்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டை பரவலாக மக்கள் மயப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, மே 18 இனப்படுகொலை வாரத்தை இவ்வாண்டில் இருந்து புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க வேண்டும் எனவும், யாழில் சிவில் அமைப்புக்கள் கூடி ஆராய்ந்துள்ளன.

யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் இடம்பெற்ற சிவில் சமூக அமைப்புகளின் ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தவையும் இன்று காசாவில் நிகழ்ந்து கொண்டிருப்பவையும் இனிமேலும் எந்த மக்களுக்கும் நிகழக் கூடாது எனவும் சிவில் சமூக அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மேலும், முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலை மீள நிகழாமை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக மக்கள் அனைவரும் சிந்திக்கும் தளமாக உருவமைப்பு செய்வதற்கு, மக்கள் சார்ந்து சிந்தித்து செயற்படும் பல சிவில் சமூக அமைப்புகள் தீர்மானித்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு விரோதமாக மூளைச்சலவை செய்யப்படுவதிலிருந்தும், மக்களுக்கு எதிராக செயற்படும் அரசு, பெருவணிக நிறுவனங்கள், கட்சிகள், அமைப்புகளின் பிரசாரங்களிலிருந்தும், தம்மை விடுவித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலை பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாகவும் மக்கள் மயப்படுத்தி மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் கலந்துரையாடப்பட்டு, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நினைவேந்தல் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.மேலும், மக்கள் தமக்கு எவ்வாறான வாழ்க்கை தேவை, அதற்கு எவ்வாறான சமூக பொருளாதார அரசியல் ஏற்பாடுகள் தேவை என்பதைத் தாமே சிந்தித்து, அதற்காக குரல் கொடுத்து செயற்படும் காலம் வந்து விட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.