Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

மே தினக் கொண்டாட்டங்களில் ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

மே தினத்தன்று விதிக்கப்படும் தடைகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை.

மே தினத்தன்று விதிக்கப்படும் தடைகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை.

மே தினக் கொண்டாட்டங்களில் காணொளி பதிவு செய்ய அனுமதியின்றி ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துத தெரிவித்துள்ளார்.

இது, நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

மே தினப் பேரணிகளில் கலந்து கொள்ளும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேறகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மே தின பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும் நாட்டிலுள்ள பிரதேச செயலக பகுதிகளில் அனைத்து வகையான மதுபானங்களையும் விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது.

எவ்வாறாயினும் மதுக்கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும் மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் இன்றும் மே 2 ஆம் திகதியும் வழமையான மூடும் நேரம் வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்  கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் பொட்டிக் வில்லாக்கள், கலால் உரிமம் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் கலால் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.