Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கடுமையாக விமர்சித்த நிலையில் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்

.

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து சீமான் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் கட்சியின் தலைவர் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக விக்கிரவாண்டியில் நடந்த மாபெரும் அரசியல் மாநாட்டில் பேசிய விஜய், “கொள்கை கோட்பாட்டு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பிரித்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள்” என்று பேசியிருந்தார்.

இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம் செய்திருந்தார். அவர் பேசுகையில், “திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்று சொல்கிறார்கள். ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும், இல்லையென்றால் சேற்றில் கால் வைக்க வேண்டும்.

ஒரு சாலையில் இடதுபுறம் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும். இது நடுநிலை அல்ல, மிக கொடுமையான நிலை” என்று விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த ஆண்டும் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் இந்த ஆண்டும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநாட்டின் போது யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கும் அரசியலை தான் செய்யப்போவதில்லை என விஜய் பேசியது குறிப்பிடத்தக்கது.