Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உள்ளூர் உற்பத்தி அரிசி போதிய கையிருப்பில்: விலையில் மாற்றங்கள் இல்லை!

.

உள்ளூர் உற்பத்தி அரிசி இனங்கள் போதிய அளவு கையிருப்பில் இருக்கின்றது. விலையில் மாற்றங்கள் இல்லை.  தென்னிலங்கை மாவட்டங்களில் இருந்து வடமாகாணத்திற்கு வரும் அரிசியினை விற்கமுடியாது என யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் ப.ஜெயசேகரம்  தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட மொத்த - சில்லறை அரிசி வியாபாரிகளுடன் விலை நிர்ணய கட்டுப்பாடு தொடர்பிலான  கலந்துரையாடல் நேற்று  யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாணம் வணிகர் கழக தலைவர் ப.ஜெயசேகரம் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுவாக அரிசி விலை தொடர்பாக கடந்த திங்கட்கிழமை (09)ம் திகதி  இலங்கை அரசாங்கத்தினால்  வர்த்தமானி  வெளியிடப்பட்டு உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட அரிசி மீண்டும் வடமாகாணத்திற்கு வருகின்றது.

உள்ளூர் உற்பத்தி அரிசி இனங்கள் போதியளவு கையிருப்பில் இருக்கின்றது. விலையில் மாற்றங்கள் இல்லை. உள்ளூர் மக்கள் பாவிக்கின்ற அரிசியை எந்த விதமான தட்டுபாடும் இன்றி கொள்வனவு செய்து கொள்ளமுடியும். 

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வெள்ளைப் பச்சை அரிசி, சம்பா இன அரிசிகள் பாரிய பிரச்சனையாக இருக்கின்றது.

அரசாங்கம் ஒரு விலையினை நிர்ணயம் செய்துள்ளனர். அதில் மொத்த, சில்லறை வியாபாரிகள் விற்கமுடியாத சூழ் நிலையில் இருக்கின்றனர்.

மொத்த வியாபார விலையாக  ஒரு கிலோ  வெள்ளைப் பச்சை, அல்லது சம்பா இன அரிசிகள் 215 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. சில்லறை விலையாக 220 ரூபா நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதாக இருந்தால் கிலோவுக்கு 05 ரூபா செலவாகின்றது. அதனை விட கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் எற்றி - இறக்க 01ரூபா செலவாகின்றது. 

போக்குவரத்து செலவினமாக  மொத்தமாக 06 ரூபா செலவாகின்றது. மொத்த - சில்லறை வியாபாரிகள் இலாபமாக 04 ரூபாவினை எதிர்பார்க்கின்றனர்.

கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கு இடையில் அரிசியினை எற்றி - இறக்க போக்குவரத்து செலவினங்கள் உள்ளிட்ட இலாபமாக 10 ரூபாவினை எதிர்பார்க்கின்றனர். 

அரசாங்கம் 05 ரூபா தான் விலையினை உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையிலே வியாபாரிகள் எமக்கு முறைப்பாடு செய்ததன் பின்னர் சில்லறை - மொத்த வியாபாரிகளை அழைத்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

வெளி மாவட்டங்களில் இருந்து  வடமாகாணத்திற்கு வரும் அரிசியினை விற்கமுடியாது. இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புடன் கதைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவருடன் கதைத்தோம். இதன்போது அவர், எனக்கு இந்த பிரச்சினை விளங்கியுள்ளது. 

இதனை அமைச்சு தான் தீர்மானித்துள்ளது. எனவே அவர்களுடன் நீங்கள் தொடர்புகொண்டு கதையுங்கள் என்றார்.

அந்தவகையில் நாங்கள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சருடன் தொடர்புகொண்டோம். இதன்போது அவரும் இந்த பிரச்சினையை ஏற்றுகொண்டார். 

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒரு கடித்தத்தை அனுப்பி வைத்த பின்னர் அதன் பிரதியை தமக்கு அனுப்புமாறு கூறினார். ஆகையால் நாங்கள் கடிதம் எழுத தீர்மானித்துள்ளோம் என்றார்.