Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர

.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 ) சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடொன் வரவேற்றதோடு சீன இராணுவத்தின் முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயணித்த பாதையின் இருமருங்கும் இரு நாடுகளின் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தொழில்நுட்பம் மற்றும் விவசாய மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல களப் பயணங்களிலும் பல உயர் மட்ட வணிகக் கூட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். இந்தப் பயணத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான விஜித ஹேரத், பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட தூதுக்குழுவொன்றும் புறப்பட்டுச் சென்றுள்ளது.இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர | President Anura Kumara Visits China