Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வடக்கில் ‘Beyond Borders’

.

கடந்த வாரம் பிரித்தானியாவைச் சேர்ந்த ‘எல்லைகளுக்கு அப்பால்’ (Beyond Borders) ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் வடமாகாணம் சென்றிருந்தார்கள். அங்கு அவர்கள் கிளிநொச்சியில் முன்னாள் போராளியும் ஊடகவியலாளருமான கோகிலவாணி, யாழ்ப்பாணத்தில் தொழில் முனைவர் ஜஸ்டின் குமார் மற்றும் The Jaffna Club நிறுவனரும் பத்தி எழுத்தாளருமான ஜெகன் அருளையா அவர்களையும் சந்தித்து வடக்கு வாழ் மக்களின் வாழ்வியல் தொடர்பான ஆவணப்படமொன்றிற்கான படப்பிடிப்பில் ஈடுபட்டார்கள்.

லண்டனைச் சேர்ந்த நண்பர்கள் லூயி கோல் (Louis Cole) மற்றும் ஜே.பி. என அழைக்கப்படும் ஹுவான் -பீற்றர் ஷுள்ஸ் (Juan-Peter (JP) Schulze) ஆகிய இருவரும் இரண்டு ஆசனங்களைக் கொண்ட இரட்டை இயந்திர விமானத்தில் உலகம் முழுவதையும் சுற்றிப்பார்த்து பல்வேறு வகையான மக்களின் கலாச்சாரங்கள் பற்றி ஆவணப்படங்களைத் தயாரித்து Beyond Borders என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார்கள். கடந்த வாரம் இவர்கள் வட மாகாணத்திற்கு சென்றிருந்தபோது நிகழ்ந்த மேற்படி சந்திப்பு பற்றி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவரும் நண்பர் ஜெகன் அருளையா அவர்கள் தன் முகநூலில் இவர்களது வருகை பற்றிப் பதிவிட்டிருந்தார்.

ஜெகன் அருளையா தனது இரண்டாவது வயதில் பெற்றோருடன் பிரித்தானியாவிற்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்த பின்னர் கடந்த 10 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகிறார். வட மாகாணத்தில் காணப்படும் வளங்கள், புலம்பெயர் மக்களின் முதலீடுகள் மற்றும் அங்குள்ள போதாமைகள் பற்றி அவ்வப்போது லங்கா பிஸினெஸ் ஒன்லைன் ஆங்கில இணையப் பத்திரிகையில் பத்திகள் எழுதி வருகிறார். அவரது கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து ‘வளரும் வடக்கு’ என்ற தொடராக’மறுமொழியில்‘ பதிவிட்டு வருகிறோம். ஜஸ்டின் குமார் ஒரு அமெரிக்க குடிமகனாகவிருந்தும் யாழ்ப்பாணத்தில் விவசாயப் பண்ணைகளை உருவாக்கி மரக்கறி, பழவகைகளைப் பதனிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். இவரது பண்ணை பற்றியும் ஜெகன் அருளையா கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

Beyond Borders தயாரிப்பாளர்களில் லூயி கோல் ஒரு யூ-ரியூப் காணொளிகளைத் தயாரிப்பதில் ஆரம்பித்து இப்போது உலகம் முழுவதும் சென்று எல்லைகளுக்கப்பால் கண் காணாத மக்களையும் அவர்களது கலாச்சாரங்களையும் ஆவணப்படுத்தி வருகிறார். இவரது நண்பரான ஜே.பி. ஒரு விமான ஓட்டி. 2015 இல் தென்னாபிரிக்காவில் ஆரம்பித்த இவர்களது சுற்றுப்பயணம் 90 நாட்களில் பல்வேறு நாடுகளையும் தரிசித்து மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருந்தது. மீண்டும் 2017 இல் இதே போன்றொரு சுற்றுப்பயணம் நடைபெற்றிருந்தது. இதுவரை உலகின் 6 கண்டங்களில் 22 நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். இவர்களது படைப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இக்குழு முழுநீள ஆவணப்படத் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

பொங்கலுக்கு முதல் வாரம் வன்னி வந்தடைந்த இக்குழு முன்னாள் போராளி கோகிலவாணியைச் சந்தித்து போருக்குப் பின்னான, குறிப்பாகப் பெண்களின் வாழ்வியலைப் படமாக்கினார்கள். பின்னர் யாழ்ப்பாணம் சென்று உடுவிலில் ஜஸ்டின் குமார் அவர்களது பண்ணையில் மாம்பழம் பதனிடும் ஆலையைப் பார்வையிட்டதுடன் அங்கு பணிபுரியும் உள்ளூர் பணியாளர்களுடன் உரையாடல்களையும் மேற்கொண்டனர்.

காலை உணவிற்காக ஜெகன் அருளையா அவர்களை பலாலி வீதியிலுள்ள அம்மாச்சி உணவகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். இலங்கை விவசாயத் திணைக்களத்தின் வெற்றிகரமான கருத்துருவாக்கத்தில் உருவான அம்மாச்சி-யாழ்ப்பாணம் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் அதே வேளை குறைந்த விலையில் நிறைந்த சுவையுடனான உணவை வழங்கும் ஒரு உணவகம் (food court) ஆகும்.

Beyond-Borders-4-1024x576.jpeg