Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அவுஸ்திரேலிய ஓபன் ; தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக பட்டம் வென்ற ஜானிக் சின்னர்

,

ஜானிக் சின்னர் ஞாயிற்றுக்கிழமை (26) தனது இரண்டாவது தொடர்ச்சியான அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப்பைக் கைப்பற்றினார்.

மெல்போர்ன் ராட் லேவர் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில், தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் நம்பர் 2 வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவை 6-3, 7-6 (4), 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

23 வயதான இத்தாலியரான சின்னர், 1992-93 இல் ஜிம் கூரியருக்குப் பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்துடன் மெல்போர்ன் பூங்காவை விட்டு வெளியேறிய இளைய வீரர் ஆவார்.

கடந்த ஜூன் மாதத்தில் சின்னர் உலகின் நம்பர் 1 வீரர் என்ற நிலகை்கு உயர்ந்தார். பின்னர், அவர் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக தனது நிலையை தக்க வைத்துக் கொண்டார்.

2019 ஆம் ஆண்டு முதல் தரவரிசையில் 1 ஆவது மற்றும் 2 ஆவது இடத்தில் இருக்கும் ஆண்களுக்கு இடையே நடைபெற்ற முதல் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டி இதுவாகும்.

2019 ஆம் ஆண்டு நம்பர் 1 இடத்தலிருந்த நோவக் ஜோகோவிச் 2 ஆம் நிலை வீரரான ரஃபேல் நடால் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்திருந்தார்.கடந்த செப்டம்பரில் நடந்த அமெரிக்க ஓபன் உட்பட ஐந்து பெரிய போட்டிகளில் மூன்றை இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர் வென்றுள்ளார்.

இத‍ேவேளை சனிக்கிழமை (25) நடைபெற்ற மகளிருக்கான அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் மேடிசன் கீஸ், மூன்று பரபரப்பான செட்களில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரிசான சபலெங்காவை வீழ்த்தி சம்பியன் ஆனார்.

29 வயதான அமெரிக்க வீராங்கனை அவுஸ்திரேலிய ஓபனில் பெறும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். 19 ஆம் நிலை வீராங்கனையான கீஸ், இரண்டு முறை நடப்புச் சாம்பியனான சபாலெங்காவுடன் மோதலில் ஒரு பெரிய பின்தங்கியவராக இருந்தார்.எனினும், அவர் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலமாக 6-3, 2-6, 7-5 என்ற பெலருஷ்ய வீராங்கனையை வீழ்த்தி சம்பியன் ஆனமையும் குறிப்பிடத்தக்கது.