Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

பொலிஸாரின் அத்துமீறல்களை ஜனாதிபதி கட்டுப்படுத்த வேண்டும்; இல்லையேல் கசப்பான அரசியல் பாடம் புகட்டப்படும்.-சித்தார்த்தன்.

பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டளையிட வேண்டும்.

பொலிஸாரின் அத்துமீறல்களை ஜனாதிபதி கட்டுப்படுத்த வேண்டும்; இல்லையேல் கசப்பான அரசியல் பாடம் புகட்டப்படும்.

தமிழர் தாயகத்தில் தமது உறவுகளை நினைவேந்தும் மக்களின் உரிமையை அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மறுப்பது நாட்டில் அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் தமது உறவுகளை நினைவேந்தும் போது நிதானத்தோடும் தார்மீகத்தோடும் அணுகும்படி பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டளையிட வேண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இந்த செயற்பாட்டிலிருந்து தவறுவாரேயானால் முன்னர் தமிழர்களிடம் அரசியல் பாடம் படித்த கசப்பான அனுபவம் போன்ற ஒரு பட்டறிவை திரும்பவும் அவர் பெற வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டு விடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.